வேலூர்:
சேலத்தை சேர்ந்தவர் மைதிலி (வயது42). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

மைதிலி ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் மைதிலி அறையில் சோதனை செய்தனர்.

அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பெண்கள் ஜெயிலுக்கு இன்று சென்று பெண் கைதி மைதிலியிடம் விசாரணை நடத்தினார்.

அவருக்கு செல்போன் எப்படி வந்தது. சிறை வளாகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.