வேலூர்:
 காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் விருதம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர்.

 அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது24). என்பதும், காட்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.