News Breaking
Live
wb_sunny

Breaking News

2500 saloon stores to be opened in Vellore, Tirupattur and Ranipet

2500 saloon stores to be opened in Vellore, Tirupattur and Ranipet

ஊரக பகுதிகளை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

50 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படாததால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அனைத்து பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து சென்னை தவிர மற்ற மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 2500 சலூன் கடைகள் இன்று காலையிலேயே திறக்கப்பட்டன.

நீண்ட தலை முடி தாடியுடன் கடைகளுக்கு சென்று கட்டிங் சேவிங் செய்து கொண்டனர். இதனால் சலூன் கடைகளில் கூட்டம் அதிகரித்தது.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment