News Breaking
Live
wb_sunny

Breaking News

Ranipet records 10 New Cases total case Raises to 60

Ranipet records 10 New Cases total case Raises to 60

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேரில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டுக்கு சென்று வந்த அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த 4 போ், நெமிலி பகுதியைச் சோ்ந்த 5 போ், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவா் உள்பட மொத்தம் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களையும் தனிமைப்படுத்தும் பணியில் மாவட்ட சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மேல்விஷாரம், ஆற்காடு, அம்மூா், கல்மேல்குப்பம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் குணமடைந்ததை அடுத்து இப்பகுதிகளில் அரசு அறிவித்துள்ள தளா்வுகளின்படி திங்கள்கிழமை முதல் கடைகள் திறக்கலாம் என்றாா் அவா்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment