News Breaking
Live
wb_sunny

Breaking News

Coronavirus infection has been confirmed for 7 persons belonging to the same family in the Ranipet district.

Coronavirus infection has been confirmed for 7 persons belonging to the same family in the Ranipet district.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நெடும்புலியை சேர்ந்த, 32 வயது ஆண் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த, 1ல் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. 

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவரது, 27 வயதான மனைவி, 65 வயதான தந்தை, 60 வயதான தாய், இரண்டு வயதுள்ள பெண் குழந்தை மற்றும் மருந்து கடைக்காரரின், 30 வயதுள்ள தங்கை, 35 வயதுள்ள அவரது கணவர் ஆகியோருக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழு பேரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

நெமிலி தாசில்தார் பாக்கியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அப்பகுதியில் வசிக்கும், 1,200 பேரை தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 108 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில், 52 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில், 36 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment