News Breaking
Live
wb_sunny

Breaking News

Two people were killed when a tipper lorry collided with a two-wheeler near Ranipet.

Two people were killed when a tipper lorry collided with a two-wheeler near Ranipet.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஜெல்லி கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை அடுத்த சங்கர் நகர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது ஜல்லிக்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் விபத்தில் சிக்கிய பலியானவர்கள் ஊனைமேட்டூர் மற்றும் காருங்காளி பகுதிகளை சேர்ந்த ராஜேஷ்(29), ராஜசேகரன்(32) என்பதும், இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக இருசக்கர வாகனத்திலேயே சென்னை சென்றதும் தெரியவந்தது.

ராணிப்பேட்டையில் தேனீர் அருந்திவிட்டு துணை சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வேலூரிலிருந்து வாலாஜாபேட்டை நோக்கி ஜல்லிகள் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து பலியானவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ராணிப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் ஸ்ரீனிவாசனை கைது செய்தனர்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment