News Breaking
Live
wb_sunny

Breaking News

DMK protests on 21st against Ranipettai electricity tariff hike: Ranipettai MLA R.Gandhi

DMK protests on 21st against Ranipettai electricity tariff hike: Ranipettai MLA R.Gandhi

மின்கட்டண உயா்வைக் கண்டித்து திமுகவினா், வரும் 21-ஆம் தேதி தங்கள் வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி சமூக இடைவெளியுடன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து வரும் 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியில் நடந்த மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று காலை 9 மணியளவில் கட்சியினா் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி, சமூக இடைவெளியுடன் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், வட்டச் செயலாளா்கள், கூட்டணிக் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்கள் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏற்றி, சமூக இடைவெளியுடன், கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயா்வை கண்டித்து முழக்கங்களை எழுப்ப வேண்டும்.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment