ராணிப்பேட்டையில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் ஒருவர் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி ரூ.60 லட்சம், 25 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித் துள்ளனர்.
ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று வந்த 3 பெண்கள், எஸ்பி மயில் வாகனத்திடம் புகார் மனு ஒன்றை அளித் தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"காட்பாடி அடுத்த பொன்னை பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (35). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகு நிலையம் ஒன்றை தொடங் கினார். அங்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, தான் நிதி நிறுவனம் ஒன்றை தொடங் கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பணத்தை முதலீடு செய்தால் ரூ.1 லட்சத்துக்கு வாரந் தோறும் ரூ.3 ஆயிரம் பணம் தருவதாகவும், தங்க நகைகளை முதலீடு செய்தால் பல ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பல பெண்களி டம் 25 பவுன் தங்கநகைகள், 60 லட்சம் ரொக்க பணம் ஆகிய வற்றை பெற்றுக்கொண்டு தற்போது, வாங்கிய பணம் மற்றும் நகைகளையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவரிடம் நாங்கள் இழந்த பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, எஸ்பி மயில் வாகனன் அளித்த உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை டிஎஸ்பி பூரணி, அழகு நிலையத்தின் உரிமையாளர் சத்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.