ராணிப்பேட்டை மாவட்டம் செய்திகள்: பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழு படை வீரர்களும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார் (24) இவர் நண்பர்களிடம் சேர்ந்து பாலாற்று கரையின் ஓரமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது 

அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமார் பாலாறு ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்துள்ளார் வெகுநேரமாகியும் கரை திரும்பாததால் அவருடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்களும் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்களும் அவரது உடலை தேடும் பணியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது