ஆயிலம் பகுதியில் உள்ள கானாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
ஆற்காடு; நிவர் புயலின் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஆற்காடு அடுத்த ஆயிலம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக விளை நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி வழிந்தோடியது. ஆயிலம்புதூர், ராமாபுரம், கவரப்பாளையம் ஆகிய கிராம மலைப்பகுதியில் இருந்து கானாறுகளில் வெள்ளம் வந்தது.
Post a comment