வெறிநாய்கள் அட்டகாசம் கடித்து குதறப்பட்ட 7 வயது சிறுவனுக்கு 30 தையல் துரித நடவடிக்கை எடுக்குமா ராணிப்பேட்டை நகராட்சி
ராணிப்பேட்டையில் வீதிகள் தோறும் சுற்றித் திரியும் நாய்களில் சில வெறிபிடித்து சாலையில் நடந்து செல்வோரை துரத்திச்சென்று கடித்து குதறுவதால் மக்கள் அச் சத்தில் உள்ளனர் . 

ராணிப்பேட்டை ஜவுளிக்கடை தெருவைச் சேர்ந்த சரத்குமார் மகன் கவுசிக் ( 7 ) . இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டருகே தெரு வில் நடந்து சென்றான் . அப்போது வெறிநாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்து கடித்து கீழே தள்ளியது பிறகு அவனை பல இடத் தில் கடித்து குதறியது . அப்போது அவ்வழியே சென்றவர்கள் மிகுந்த சிர மப்பட்டு நாயிடமிருந்து சிறுவனை மீட்டனர் முகம் உட்பட உடல் முழு வதும் பலத்த காயமடைந்த சிறுவன் ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகி றான் . 

அவனின் காயங்களு க்கு 30 தையல் போடப் பட்டிருக்கிறது . இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை காந்தி ரோடு , கிடங்கு தெரு , பஜார் வீதியில் ரஞ்சன் ( 25 ) , பன் னீர்செல்வம் ( 70 ) , நிகிதா 25 ) உட்பட சுற்றுப்பகுதிக ளில் 10 க்கும் மேற்பட்ட வர்கள் நாய்க்கடிக்கு உள் ளாகி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை , ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோட் டில் வசிக்கும் ரங்கன் ( 40 ) என்பவர் வண்டி மேட்டுச் சாலையில் நடந்து சென்றார் . அப்போது வெறிநாய் ஒன்று ஓடிவந்து கடித்து விட்டது . இதில் அவரின் இடது காலில் காயமேற் பட்டது . இப்படியாக நகரம் முழுவதும் தெரு நாய்கள் , வெறிநாய்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளது .

இவற்றால் விபத்துகளும் ஏற்படுகிறது . நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை செய்து இனவிருத்தியை குறைக்க திட்டம் இருந்தும் அது செயல்படுத்தப் படுவதில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் ஒன்றும் செய்யக்கூடாது நாய்களை என்கிறார்கள் , நாய்களுக்கு பாதுகாப்பு உள்ளது . ஆனால் மக்களுக்கு பாது காப்பு இல்லையே என்று பாதிக்கப்பட்டவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சியை பணிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை . நாய்கள பிடிக்க ஆள் கிடைக்கல வெறிநாய்கள் அட்ட காசம் குறித்து கேட்டதற்கு நகராட்சி கமிஷனர் செல் வபாலாஜி கூறியதாவது : வெறிநாய் ஒன்றை இன்று ( நேற்று ) பிடித்து விட் டோம்.

மற்ற நாய்கள் பிடிக்கப்படும் . நாய்களை பிடித்து கருத்தடை செய் வதற்கு அனைத்து வசதி களும் உள்ளது . ஆனால் நாய்களை பிடித்து கொடும் பதற்கு ஆட்கள் கிடைச் கவில்லை , பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறோம் . இப்போது மதுரையிலிருந்து ஆட்களை கொண்டுவர ஏற்பாடுகள் செய்துவருகிறேன் என்றார் .