ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கிழவனம் பெரிய ஏரியில் நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசிய நிலையில் வாலிபர் சடலம் மிதப்பதாக விஏஓ கோமதிக்கு தகவல் கிடைத்தது . 
இது குறித்து விஏஓ அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் . 

சடலமாக கிடந்த நபருக்கு சுமார்  35 வயது இருக்கும் . யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை . இதையடுத்து அரக்கோணம் தீயணைப்பு நிலைய அதிகாரி காமராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர் . பின்னர் போலீ சார் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத் வமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

மேலும் துகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் , தற்கொலை செய்து கொண்டாரா , தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா , அல்லது யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் .