ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 27.2 மி.மீ மழை பதிவு 
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது . 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் மழை பெய்தது . தொடர்ந்து , இரவு முதல் விடிய விடிய நேற்றும் மழை பெய்தது . இதில் கலவையில் அதிகபட்சமாக 27.2 மி.மீ மழை பதிவாகி யிருந்தது . 

பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் ( மில்லி மீட்டரில் ) , அரக்கோணம் -21.2 , ஆற்காடு- 16 , காவேரிப் பாக்கம் - 12 , சோளிங்கர்- 25 , வாலாஜா- 12 , அம்மூர்- 24 , கலவை . 27.2