ஆற்காடு அருகே நேற்று அதிகாலை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . 
வங்கக்கடலில் உரு வாகியுள்ள புரெவி புயல் நேற்று கரையை கடந்தது . இதனால் தமிழகத்தின்பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது . அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது .

இந்நிலையில் , நேற்று அதிகாலை ஆற்காடு செய்யாறு சாலையில் உள்ள கீரம்பாடி அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான பெரிய இலுப்பை மரம் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது . 

அதிகாலையில் சாலையில் மரம் விழுந் ததுகுறித்து தகவலறிந்து செய்யாறு , கலவை வழி யாக வந்த வாகனங்கள் அனைத்தும் கரிக்கந்தாங்கல் , கே.வேளூர் வழியாக திருப்பி விடப்பட்டது . 

இதற்கிடையில் தகலவறிந்த நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத் தனர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .