சோளிங்கர் பேரூராட் சியில் மழை வெள்த்தில் அடித்து செல்லப்பட்ட குடிநீர் பைப்புகள் சீர மைக்கும் பணி தீவிரா மாக நடைபெற்று வருகிறது . 
சோளிங்கர் பேரூராட் சியில் 18 வார்டுகள் உள் ளது . இதில் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இவர்களுக் குப் பொன்னை ஆறு , சோளிங்கர் ஏரி பகுதிக ளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல் நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகிக் கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் , நிவர் காரணமாக சோளிங்கர் மற்றும் சுற் றுப்புற பகுதிகளில் சூறா வளி காற்றுடன் கூடிய பலத்த மழை கடந்த 26 , 27 ம் தேதிகளில் பெய்தது , இதில் பல்வேறு இடங்க ளில் மரங்கள் , மின்கம் பங்கள் சாய்ந்தது . 

மிளகாய் குப்பம் , மஞ் சூர் கண்டிகை , கோளேரி ஆகிய இடங்களில் பொன்னை ஆற்றி லிருந்து சோளிங்கருக்கு வரும் குடி நீர் பைப்பு கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது மேலும் பொன்னை பகுதி யில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் சோளிங்கரில் குடிநீர் விநி யோகம் செய்வதில் சிக் கல் ஏற்பட்டுள்ளது .

இதனால் சோளிங்கரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது . இதையடுத்து செயல் அலுவலர் செண் பகராஜன் தலைமையில் தூய்மை ஆய்வாளர் வடிவேல் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று மழை வெள்ளத்தில் பைப்புகள் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளுக்கு சென்று பைப் லைன் களை சீர மைக்கும் பணி யில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .