நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது . இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . 
ஆர்ப்பரித்துச்சென்ற மழைநீர் வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் , குளங்கள் நிரம்பி வருகின்றன . இதனிடையே புரெவி புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது . 

இதனால் ஏரி , குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன . இதனிடையே ஆற்றுநீர் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் செல்லும் பொது மக்கள் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் ஏற்படுகிறது . 

இதனைதடுக்கும் விதமாக நீர்  வேடிக்கை பார்க்கச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் , என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறுகையில் , ஆந்திர மாநிலம் சித்தூரில் பலத்த மழை பெய்து வருகிறது . அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது . 
இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் எனவே , பாலாறு உட்பட நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் . நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கரை யோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டும் ' என்றார்.