ராணிப்பேட்டை மாவட்டம் செய்திகள்: மாயமான சிறுமி சடலமாக மீட்பு ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தில் திங்கள்கிழமை மாயமான 3 வயது சிறுமி அங்குள்ள பாழடைந்த விவசாய கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
செட்டி தங்களைச் சேர்ந்த காந்தி ராஜேஸ்வரி தம்பதியின் இளைய மகள் கோபிகா 3 திங்கள்கிழமை வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது மாயமானதாக கூறப்படுகிறது.

அங்குள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தேடுதல் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

இந்நிலையில் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு அங்குள்ள அந்த கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எம்எல்ஏ ஆறுதல்: முன்னதாக சிறுமியின் பெற்றோரை ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர். காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.