News Breaking
Live
wb_sunny

Breaking News

Heavy rain warning for 4 districts including Tirupur - Meteorological Department

Heavy rain warning for 4 districts including Tirupur - Meteorological Department

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
மேலும்,  தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்றும், ஜனவரி 2ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.  

அதேபோல், 03.01.2021, 04.01.2021 தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறியுள்ள சென்னை வானிலை மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல்  பகுதிகளில் பலத்த  காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல்,  திண்டிவனம்  (விழுப்புரம் ) 7, செஞ்சி , மரக்காணம்  (விழுப்புரம்) தலா 6,  ஆடுதுறை  (தஞ்சாவூர்), செய்யூர்  (செங்கல்பட்டு), விளாத்திகுளம்  (தூத்துக்குடி) தலா 5, ராமேஸ்வரம் , கடலூர், பாண்டிச்சேரி தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Tags

Newsletter Signup

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

Post a comment