Subscribe to Newsletter


Ranipet
ராணிப்பேட்டையில் கைசாலா செயலி மூலம் புயல் சேதம் கணக்கெடுப்பு

ராணிப்பேட்டையில் கைசாலா செயலி மூலம் புயல் சேதம் கணக்கெடுப்பு

December 05, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், கைசாலா செயலி மூலம், புயல், மழை சேதம் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.  புயல், மழையால் ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ், ஏரியை நேற்று பார்வையிட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவேரிப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு, 30.5 கன அடியில், 20.5 அடி நிரம்பியுள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும். ஏரிக்கரைகள் பலப்படுத்தப்படும். ஏரி அருகே, பூங்கா அமைக்கப்படும்.  நிவர் புயலால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை கண்டறிய, தமிழகத்திலேயே முதல் முறையாக கைசாலா செயலி மூலமாக, ஜியோ டேக்கிங் முறையில் புகைப்படங்களுடன் கூடிய, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வருவாய், வேளாண், தோட்டக்கலைத்துறையினர் கூட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

December 05, 2020 Raj Kumar.G
நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது . இதனால் ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .  ஆர்ப்பரித்துச்சென்ற மழைநீர் வெள்ளத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள் , குளங்கள் நிரம்பி வருகின்றன . இதனிடையே புரெவி புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது .  இதனால் ஏரி , குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன . இதனிடையே ஆற்றுநீர் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் செல்லும் பொது மக்கள் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் ஏற்படுகிறது .  இதனைதடுக்கும் விதமாக நீர்  வேடிக்கை பார்க்கச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் , என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறுகையில் , ஆந்திர மாநிலம் சித்தூரில் பலத்த மழை பெய்து வருகிறது . அங்குள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . சுமார் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது .  இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் எனவே , பாலாறு உட்பட நீர் நிலைகளை வேடிக்கை பார்க்கச் செல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 27.2 மி.மீ மழை பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 27.2 மி.மீ மழை பதிவு

December 05, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலவையில் 27.2 மி.மீ மழை பதிவு  வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது .  ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் மழை பெய்தது . தொடர்ந்து , இரவு முதல் விடிய விடிய நேற்றும் மழை பெய்தது . இதில் கலவையில் அதிகபட்சமாக 27.2 மி.மீ மழை பதிவாகி யிருந்தது .  பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் ( மில்லி மீட்டரில் ) , அரக்கோணம் -21.2 , ஆற்காடு- 16 , காவேரிப் பாக்கம் - 12 , சோளிங்கர்- 25 , வாலாஜா- 12 , அம்மூர்- 24 , கலவை . 27.2 
கீரம்பாடி அருகே நேற்று பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

கீரம்பாடி அருகே நேற்று பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

December 04, 2020 Raj Kumar.G
ஆற்காடு அருகே நேற்று அதிகாலை சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .  வங்கக்கடலில் உரு வாகியுள்ள புரெவி புயல் நேற்று கரையை கடந்தது . இதனால் தமிழகத்தின்பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது . அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது . இந்நிலையில் , நேற்று அதிகாலை ஆற்காடு செய்யாறு சாலையில் உள்ள கீரம்பாடி அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான பெரிய இலுப்பை மரம் பலத்த காற்றால் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது .  அதிகாலையில் சாலையில் மரம் விழுந் ததுகுறித்து தகவலறிந்து செய்யாறு , கலவை வழி யாக வந்த வாகனங்கள் அனைத்தும் கரிக்கந்தாங்கல் , கே.வேளூர் வழியாக திருப்பி விடப்பட்டது .  இதற்கிடையில் தகலவறிந்த நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரத்தை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத் தனர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
பொன்னை , பாலாறு கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பொன்னை , பாலாறு கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை

December 04, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம்பகவத் தலை மையில் பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது . ராணிப்பேட்டை , பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார் .  ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம் பகவத் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது : ஆந்திர மாநிலம் . சித்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பொன்னை , பாலாற்றில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புளது . எனவே பொன்னை , பாலாறு கரையோரம் வசிக்கும் மக்கள் , ஆறுகளின் அருகே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது .  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் .  மேலும் , ராணிப்பேட்டை கோட்டாட்சியர் இளம்பகவத் , வாலாஜா தாசில்தார் பாக்கிய நாதன் முன்னிலையில் சீக்கராஜபுரம் பொன்னை ஆறு கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டு.
அரக்கோணம் அடுத்த கிழவனம் பெரிய ஏரியில் வாலிபர் சடலம்,

அரக்கோணம் அடுத்த கிழவனம் பெரிய ஏரியில் வாலிபர் சடலம்,

December 02, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கிழவனம் பெரிய ஏரியில் நேற்று முன்தினம் இரவு துர்நாற்றம் வீசிய நிலையில் வாலிபர் சடலம் மிதப்பதாக விஏஓ கோமதிக்கு தகவல் கிடைத்தது .  இது குறித்து விஏஓ அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் .  சடலமாக கிடந்த நபருக்கு சுமார்  35 வயது இருக்கும் . யார் , எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை . இதையடுத்து அரக்கோணம் தீயணைப்பு நிலைய அதிகாரி காமராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர் . பின்னர் போலீ சார் , சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத் வமனைக்கு அனுப்பி வைத்தனர் .  மேலும் துகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் , எந்த ஊரை சேர்ந்தவர் , தற்கொலை செய்து கொண்டாரா , தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா , அல்லது யாரேனும் கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மாயமான சிறுமி சடலமாக விவசாய கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.

மாயமான சிறுமி சடலமாக விவசாய கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.

December 02, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் செய்திகள்: மாயமான சிறுமி சடலமாக மீட்பு ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தில் திங்கள்கிழமை மாயமான 3 வயது சிறுமி அங்குள்ள பாழடைந்த விவசாய கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார். செட்டி தங்களைச் சேர்ந்த காந்தி ராஜேஸ்வரி தம்பதியின் இளைய மகள் கோபிகா 3 திங்கள்கிழமை வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது மாயமானதாக கூறப்படுகிறது. அங்குள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தேடுதல் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இந்நிலையில் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு அங்குள்ள அந்த கிணற்றில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எம்எல்ஏ ஆறுதல்: முன்னதாக சிறுமியின் பெற்றோரை ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர். காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது .

வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது .

December 01, 2020 Raj Kumar.G
வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நக ராட்சி கடந்த 1866 ம் ஆண்டு தமிழகத்தில் முதலாவதாக தொடங்கப்பட்டதாகும் .கடந்த 1960 ம் ஆண்டு நூற் றாண்டுவிழா கொண்டா டப்பட்டது . தொடர்ந்து இந்த நகராட்சிக்கு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் உள்ளிட்ட தலை வர்கள் வருகை தந்து சிறப் பித்தனர் . தொடர்ந்து 154 வது ஆண்டு விழா நேற்று நக ராட்சிசார்பில் கொண்டா டப்பட்டது.  நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப் புகளை வழங்கினார் . தொடர்ந்து அவர் பேசு கையில் , ' பொது மக்கள் அனை வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி , கடைவரி ஆகியவற்றை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் . தொடர்ந்து பல்வேறு அடிப்படை கட்டமைப் புவசதிகள் செய்யப்பட்டு வருகிறது . ' இவ்வாறு அவர் பேசினார் . இந்நிகழ்ச்சியில் நக ராட்சி பொறியாளர் நட ராஜன் , பணிமேற்பார்வை யாளர் கமலக்கண்ணன் , துப்புரவு ஆய்வாளர் சந் தான கிருஷ்ணன் , களப் பணி உதவியாளர் மகேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
குடிநீர் இணைப்புகள் சீரமைக்கும் பணி தீவிரம்

குடிநீர் இணைப்புகள் சீரமைக்கும் பணி தீவிரம்

December 01, 2020 Raj Kumar.G
சோளிங்கர் பேரூராட் சியில் மழை வெள்த்தில் அடித்து செல்லப்பட்ட குடிநீர் பைப்புகள் சீர மைக்கும் பணி தீவிரா மாக நடைபெற்று வருகிறது .  சோளிங்கர் பேரூராட் சியில் 18 வார்டுகள் உள் ளது . இதில் 40 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இவர்களுக் குப் பொன்னை ஆறு , சோளிங்கர் ஏரி பகுதிக ளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல் நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகிக் கப்பட்டு வருகிறது . இந்நிலையில் , நிவர் காரணமாக சோளிங்கர் மற்றும் சுற் றுப்புற பகுதிகளில் சூறா வளி காற்றுடன் கூடிய பலத்த மழை கடந்த 26 , 27 ம் தேதிகளில் பெய்தது , இதில் பல்வேறு இடங்க ளில் மரங்கள் , மின்கம் பங்கள் சாய்ந்தது .  மிளகாய் குப்பம் , மஞ் சூர் கண்டிகை , கோளேரி ஆகிய இடங்களில் பொன்னை ஆற்றி லிருந்து சோளிங்கருக்கு வரும் குடி நீர் பைப்பு கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது மேலும் பொன்னை பகுதி யில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் சோளிங்கரில் குடிநீர் விநி யோகம் செய்வதில் சிக் கல் ஏற்பட்டுள்ளது . இதனால் சோளிங்கரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது . இதையடுத்து செயல் அலுவலர் செண் பகராஜன் தலைம
ஆற்காடு அருகே மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்

ஆற்காடு அருகே மின்கம்பியை மிதித்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான்

November 30, 2020 Raj Kumar.G
ஆற்காடு: காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், ஆட்டோ டிரைவர். இவரது மகன் சுரேந்தர் (வயது 7). ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த வரகூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் புயலின் போது பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து, மின்கம்பிகள் அறுந்து கிடந்தன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அதேபோல் வரகூர் பகுதியிலும் மின்கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காத அப்பகுதி சிறுவர்கள் அந்தப்பகுதியில்தேங்கியுள்ள மழைநீரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சுரேந்தர் மிதித்து உள்ளான். இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உறவ
பாலாற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழு படை தேடி வருகின்றனர்

பாலாற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழு படை தேடி வருகின்றனர்

November 30, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டம் செய்திகள்: பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் நண்பர்களுடன் மது அருந்தும் போது தவறி விழுந்த இளைஞரை தீயணைப்பு வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புக் குழு படை வீரர்களும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார் (24) இவர் நண்பர்களிடம் சேர்ந்து பாலாற்று கரையின் ஓரமாக மது அருந்தியதாக கூறப்படுகிறது  அப்போது எதிர்பாராதவிதமாக சரத்குமார் பாலாறு ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்துள்ளார் வெகுநேரமாகியும் கரை திரும்பாததால் அவருடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்களும் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்களும் அவரது உடலை தேடும் பணியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆயிலம் பகுதியில் உள்ள கானாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

ஆயிலம் பகுதியில் உள்ள கானாறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

November 26, 2020 Raj Kumar.G
ஆற்காடு;  நிவர் புயலின் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆற்காடு அடுத்த ஆயிலம் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக விளை நிலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி வழிந்தோடியது. ஆயிலம்புதூர், ராமாபுரம், கவரப்பாளையம் ஆகிய கிராம மலைப்பகுதியில் இருந்து கானாறுகளில் வெள்ளம் வந்தது. இதனால் கீழ் குப்பம் கானாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி வழிந்தோடும் நிலையில் கத்தியவாடி, மற்றும் சாத்தூர் ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் வெள்ளநீர் அதிக அளவில் செல்கிறது.
ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது

ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது

November 26, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது. மழைநீர் தேங்கியதால் ஒருமணி நேரம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழை: ஒருவர் பலி, 9 வீடுகள், வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழை: ஒருவர் பலி, 9 வீடுகள், வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம்

November 26, 2020 Raj Kumar.G
நிவர் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடிய,விடிய பெய்த கன மழையால் ஒருவர் உயிரிழந்தார், 9 வீடுகள் மற்றும் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலமான காற்று வீசி வருவதால் பேருந்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
Ranipettai municipality to take immediate action against 7-year-old boy who was bitten by rabies dog

Ranipettai municipality to take immediate action against 7-year-old boy who was bitten by rabies dog

November 25, 2020 Raj Kumar.G
வெறிநாய்கள் அட்டகாசம் கடித்து குதறப்பட்ட 7 வயது சிறுவனுக்கு 30 தையல் துரித நடவடிக்கை எடுக்குமா ராணிப்பேட்டை நகராட்சி ராணிப்பேட்டையில் வீதிகள் தோறும் சுற்றித் திரியும் நாய்களில் சில வெறிபிடித்து சாலையில் நடந்து செல்வோரை துரத்திச்சென்று கடித்து குதறுவதால் மக்கள் அச் சத்தில் உள்ளனர் .  ராணிப்பேட்டை ஜவுளிக்கடை தெருவைச் சேர்ந்த சரத்குமார் மகன் கவுசிக் ( 7 ) . இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டருகே தெரு வில் நடந்து சென்றான் . அப்போது வெறிநாய் ஒன்று சிறுவன் மீது பாய்ந்து கடித்து கீழே தள்ளியது பிறகு அவனை பல இடத் தில் கடித்து குதறியது . அப்போது அவ்வழியே சென்றவர்கள் மிகுந்த சிர மப்பட்டு நாயிடமிருந்து சிறுவனை மீட்டனர் முகம் உட்பட உடல் முழு வதும் பலத்த காயமடைந்த சிறுவன் ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகி றான் .  அவனின் காயங்களு க்கு 30 தையல் போடப் பட்டிருக்கிறது . இதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை காந்தி ரோடு , கிடங்கு தெரு , பஜார் வீதியில் ரஞ்சன் ( 25 ) , பன் னீர்செல்வம் ( 70 ) , நிகிதா 25 ) உட்பட சுற்றுப்பகுதிக ளில் 10 க்கும் மேற்பட்ட வர்கள் நாய்க்கடிக்கு
Power Cut in Ranipet and Sholinghur Today

Power Cut in Ranipet and Sholinghur Today

November 22, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த சிப்காட், முகுந்தராயபுரம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார்நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தங்கல், அக்ராவரம், சீக்கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம், லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், பேஸ்-3, அம்மூர், வேலம், கல்மேல்குப்பம், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை ராணிப்பேட்டை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் ஏ.எல்.பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் சோளிங்கர், எரும்பி, கீழ்பாலாபுரம், ஆர்.கே.பேட்டை, கல்பட்டு, பத்மாபுரம், வீரமங்கலம், கரிக்கல், பாண்டியநெல்லூர், மேல்வெங்கடாபுரம், கொடைக்கல், ரெண்டாடி, நீலகண்டாராயன் பேட்டை, ஜம்புகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின
ராணிப்பேட்டை அருகே விவசாயிகள் சாலை மறியல்

ராணிப்பேட்டை அருகே விவசாயிகள் சாலை மறியல்

November 20, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை அருகே அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனைக்காக நெல் கொண்டு வந்த விவசாயிகளைத் தரக்குறைவாகப் பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் பார்வையிட்டு விலை நிர்ணயம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அம்மூர் நெல் வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன் என்பவர், விவசாயிகளை நோக்கி ஈர நெல் கொண்டு வருவதாக ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராணிப்பேட்டை - சோளிங்கர் ச
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் துணிகர மோசடி அழகு நிலைய உரிமையாளர் மீது புகார்

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.60 லட்சம் துணிகர மோசடி அழகு நிலைய உரிமையாளர் மீது புகார்

November 19, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டையில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் ஒருவர் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி ரூ.60 லட்சம், 25 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித் துள்ளனர். ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று வந்த 3 பெண்கள், எஸ்பி மயில் வாகனத்திடம் புகார் மனு ஒன்றை அளித் தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: "காட்பாடி அடுத்த பொன்னை பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (35). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகு நிலையம் ஒன்றை தொடங் கினார். அங்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, தான் நிதி நிறுவனம் ஒன்றை தொடங் கியுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னிடம் பணத்தை முதலீடு செய்தால் ரூ.1 லட்சத்துக்கு வாரந் தோறும் ரூ.3 ஆயிரம் பணம் தருவதாகவும், தங்க நகைகளை முதலீடு செய்தால் பல ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, பல பெண்களி டம் 25 பவுன் தங்கநகைகள், 60 லட்சம் ரொக்க பணம் ஆகிய வற்றை பெற்றுக்கொண்டு தற்போது, வாங்கிய பணம் மற்றும் நகைகளையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவரிடம் நாங்க
இந்த 5 மாவட்டங்களில் மட்டும் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!! எப்போது வேண்டுமானாலும் அடித்து ஊற்றுமாம்

இந்த 5 மாவட்டங்களில் மட்டும் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!! எப்போது வேண்டுமானாலும் அடித்து ஊற்றுமாம்

October 12, 2020 Raj Kumar.G
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை 13-10-2020 அதிகாலை காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும்,  கடந்த 24 மணிநேரத்தில் மகாபலிபுரம் (செங்கல்பட்டு) பெரியாறு (தேனி) திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 3 சென்டி மீட
Distribution of applications to select beneficiaries in Backyard Poultry Scheme Collector Divyadashini

Distribution of applications to select beneficiaries in Backyard Poultry Scheme Collector Divyadashini

September 25, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை,  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை 2020-2021-ம் ஆண்டில் விலையில்லா புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டத்தின் கீழ் விலையில்லா நாட்டு இன அசில் கோழிகள் மொத்தம் 7 ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 பெண் பயனாளிகள் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் மொத்தம் 70 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கடந்த ஆண்டுகளில் விலையில்லா கோழிகள் பெறாதவர்கள், பிற திட்டங்களால் பயன் பெறாதவர்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மூலமாக வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர், ராணிப்பேட்டை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.