Subscribe to Newsletter


Ranipet
Collector S. Divyadashini inspected Puthuppadi Government Primary Health Center next to Arcot

Collector S. Divyadashini inspected Puthuppadi Government Primary Health Center next to Arcot

September 25, 2020 Raj Kumar.G
ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். புறநோயாாளிகள் பதிவேடுகள், நோயாளிகள் படுக்கை வசதிகள், புதிய கட்டடம் கட்டும் இடம் ஆகியவை குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையை அளவீடு செய்து மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையை அளவீடு செய்து மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

September 25, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையை சுமாா் 45 ஆண்டுகளுக்குப் பின் முழுவதுமாக அளவீடு செய்து மறு வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. நாட்டின் முக்கியத் தொழில் நகரங்களுள் ஒன்றாக ராணிப்பேட்டை உள்ளது. இங்கு 1974-ஆம் ஆண்டு சுமாா் 1,089.82 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து, சிறப்பு பொருளாதார மண்டலம் என மிகப்பெரிய தொழிற்பேட்டையாக உருவெடுத்துள்ளது. இங்கு பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த தொழிற்பேட்டையின் குறிப்பிட்ட தொலைவில் சென்னை விமான நிலையம், துறைமுகம், ரயில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுடன், நாட்டின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலை அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்தும், தொழிற்சாலைக்குத் தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி பொருள்களைக் கொண்டு செல்ல ஏதுவான சூழல் உள்ளது. இந்நிலையில், வேலூா் மாவட்டமானது, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங
New bus stand in Ranipettai: Space surveying work has started

New bus stand in Ranipettai: Space surveying work has started

September 03, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை நகரில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை அளவீடு செய்து பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழக அரசின் நிா்வாக வசதிக்காக வேலூா் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூா் தனி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தற்காலிக அலுவலகம், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நகராட்சி அலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், ஆட்சியா் அலுவலக வளாகம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.118 .40 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டது. ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதிய ஆட்ச
DMK MLA R.Gandhi affected by Covid 19

DMK MLA R.Gandhi affected by Covid 19

July 20, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை, தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுப்பணிகளில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன் மற்றும் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கொரோனா மீதான பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
DMK protests on 21st against Ranipettai electricity tariff hike: Ranipettai MLA R.Gandhi

DMK protests on 21st against Ranipettai electricity tariff hike: Ranipettai MLA R.Gandhi

July 19, 2020 Raj Kumar.G
மின்கட்டண உயா்வைக் கண்டித்து திமுகவினா், வரும் 21-ஆம் தேதி தங்கள் வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றி சமூக இடைவெளியுடன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மின்கட்டண உயா்வை கண்டித்து வரும் 21-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியில் நடந்த மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அன்று காலை 9 மணியளவில் கட்சியினா் அனைவரும் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி, சமூக இடைவெளியுடன் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், வட்டச் செயலாளா்கள், கூட்டணிக் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்கள் வீடுகளின் முன் கருப்புக்கொடி ஏற்றி, சமூக இடைவெளியுடன், கருப்புக்கொடி ஏந்த
Collector Divyadarshini inaugurated the Corona Testing Center, which is located along the National Highway near the Kariveripakkam With SP Mayville.

Collector Divyadarshini inaugurated the Corona Testing Center, which is located along the National Highway near the Kariveripakkam With SP Mayville.

June 08, 2020 Raj Kumar.G
காவேரிப்பாக்கம் அடுத்த பெரும் பு லிப் பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சா லையையொட்டி அமைக் கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார் .  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்த அளவில் காணப்பட் டது . ஆனால் தற்போது கொரோனா வின் தாக் கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது . அதிலும் மாவட்டத்தில் உள்ள நெமிலி , ஆற்காடு , அரக்கோணம் , வாலாஜா ஆகிய 4 தாலுகா வில் கொரோனாவைரஸ் தொற்று அதிகளவில் பரவி | யுள்ளது .  இதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு சென்று வந்த வர்கள் , சென்னை உறவி னர்கள் வீட்டிற்கு சென்று திரும் பியவர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது . இதனால் , கொரோனா வைரஸ் தொற்று பர வலை தடுக்கும் விதமாக மாவட்ட எல்லையில் பெரும் புலிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ் சாலை யை யொட்டி கொரோனா பரிசோ தனை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது .  இதனை கலெக்டர் திவ்ய தர்ஷினி நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார் . அப்போது , எஸ் பி மயில்வாகனன் , அரக்கோ ணம் ஆர்டிஓ ( பொறுப்பு ) பேபி இந்திரா , டிஎஸ்பி மனோகரன் , தாசில்தார் பாக்கியநாதன் , ம
Coronavirus infection has been confirmed for 7 persons belonging to the same family in the Ranipet district.

Coronavirus infection has been confirmed for 7 persons belonging to the same family in the Ranipet district.

June 05, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நெடும்புலியை சேர்ந்த, 32 வயது ஆண் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த, 1ல் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது.  இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவரது, 27 வயதான மனைவி, 65 வயதான தந்தை, 60 வயதான தாய், இரண்டு வயதுள்ள பெண் குழந்தை மற்றும் மருந்து கடைக்காரரின், 30 வயதுள்ள தங்கை, 35 வயதுள்ள அவரது கணவர் ஆகியோருக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏழு பேரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  நெமிலி தாசில்தார் பாக்கியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள், அப்பகுதியில் வசிக்கும், 1,200 பேரை தனிமைப்படுத்தி, கண்காணித்து வருகின்றனர். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 108 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வேலூர் மாவட்டத்தில், 52 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில், 36 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள
Two people were killed when a tipper lorry collided with a two-wheeler near Ranipet.

Two people were killed when a tipper lorry collided with a two-wheeler near Ranipet.

June 05, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது ஜெல்லி கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராணிப்பேட்டை அடுத்த சங்கர் நகர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது ஜல்லிக்கல் ஏற்றிவந்த டிப்பர் லாரி அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் விபத்தில் சிக்கிய பலியானவர்கள் ஊனைமேட்டூர் மற்றும் காருங்காளி பகுதிகளை சேர்ந்த ராஜேஷ்(29), ராஜசேகரன்(32) என்பதும், இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக இருசக்கர வாகனத்திலேயே சென்னை சென்றதும் தெரியவந்தது. ராணிப்பேட்டையில் தேனீர் அருந்திவிட்டு துணை சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வேலூரிலிருந்து வாலாஜாபேட்டை நோக்கி ஜல்லிகள் ஏற்றி அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து பலியானவர்களி
The SP has warned that the vehicle will be confiscated if the mask is not worn in Ranipet.

The SP has warned that the vehicle will be confiscated if the mask is not worn in Ranipet.

June 04, 2020 Raj Kumar.G
ராணிப்­பேட்டை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்.பி.எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்­பேட்டை மாவட்டத்­தில் கொரோனா நோய்த்­தொற்று அதிக அள­வில் பரவிவரு­கி­றது. முன்­னெச்­ச­ரிக்­கை­யாக முககவ­சம் அணி­யா­மல் இரு­சக்­கர வாகனத்­தில் சென்றவர்களையும், நடந்து சென்­ற­வர்­கள் ஆகி­யோரை பிடித்து அரசு மேல்­நி­லைப்­ பள்ளி வளா­கத்­தில் அழைத்து வந்து விழிப்­பு­ணர்வு செய்யப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் மயில்­வாகனன் கலந்­து­கொண்டு முககவ­சம் கண்­டிப்­பாக அணிய வேண்­டும் என்­றும் அப்­படி இனி­மேல் அணி­யா­மல் சென்றால் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்டு வாகன­மும் பறி­மு­தல் செய்­யப்­ப­டும் என எச்­ச­ரித்து அனை­வ­ருக்­கும் முகக் கவ­சங்­கள் கொடுத்து அனுப்பி வைத்­தார். இதில் டிஎஸ்பி கீதா, இன்ஸ்­பெக்­டர் திரு­நா­வுக்­க­ரசு, எஸ்.ஐக்­கள் முத்­தீஸ்­வ­ரன், கோவிந்த­சாமி மற்­றும் போலீ­சார் பலர் கலந்து கொண்­டனர்.
5 Persons Infected in Ranipet, June 4

5 Persons Infected in Ranipet, June 4

June 04, 2020 Raj Kumar.G
5 பேருக்கு தொற்று ராணிப்பேட்டை , ஜூன் 4  அரக்கோணம் கிருஷ் ணாம்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண் , அவரது 60 வயது பாட்டி ,  பொய்கைபாக்கத்தைச் சேர்ந்த 61 வயது ஆண் ஆற்காடு மாசாபேட்டை சேர்ந்த 29 வயது ஆண் வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்  ஆகிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது . இதில் , வன் னிவேடு பெண் , சென்னை தண்டையார்பேட்டையில் தங்கியிருந்தபோது தொற்று ஏற்பட்டுள்ளது .
COVID-19, blocked the government officials from taking her to hospital.

COVID-19, blocked the government officials from taking her to hospital.

June 04, 2020 Raj Kumar.G
TIRUPATHUR: Tension prevailed for a while at Udayenthram in Vaniyambadi here when family members of a woman, who tested positive for COVID-19, blocked the government officials from taking her to hospital. The woman and her husband had returned from Chennai recently, and samples were taken from them at the district border checkpost. When the results came out on Tuesday, local Health authorities visited the family and informed that the woman had tested positive. However, when the officials asked her to come to hospital for treatment, her husband and a few others confronted the officials, said sources. Later, top officers of Revenue and Police departments rushed to the spot and spoke to the family members. Finally, they managed to get her admitted to hospital. “We convinced them on the need to take treatment for the infection and subsequently took the woman to hospital,” said Police SP P Vijayakumar.The woman was later admitted to the isolation ward at Government Vellore Medic
Fake doctor arrested for treating Corona in Ranipet, Panapakkam

Fake doctor arrested for treating Corona in Ranipet, Panapakkam

June 03, 2020 Raj Kumar.G
பனப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், டி.பார்ம் படித்துள்ளார். அப்பகுதியில் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தார். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்ததது. அவரது உத்தரவுபடி மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் குழுவினர் பாணாவரம் பகுதிக்கு விரைந்து வந்து சிகிச்சை மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த தயாளனை பிடித்து விசாரித்தபோது அவர் டி.பார்ம் படித்து விட்டு சிகிச்சை மையத்தை தொடங்கி 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறினார். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதாக கூறினார். மேலும் கிளினிக்கில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் பெண்களுக்கான கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பரிமுதல் செய்து கிளீனிக்குக்கு சீல் வைத்தனர். தயாளன் மீது மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி பாணாவரம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலி டாக்டர் தயாள
2500 saloon stores to be opened in Vellore, Tirupattur and Ranipet

2500 saloon stores to be opened in Vellore, Tirupattur and Ranipet

May 25, 2020 Raj Kumar.G
ஊரக பகுதிகளை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முடிதிருத்தும் தொழிலாளர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 50 நாட்களுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படாததால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அனைத்து பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து சென்னை தவிர மற்ற மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று முதல் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சி வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 2500 சலூன் கடைகள் இன்று காலையிலேயே திறக்கப்பட்டன. நீண்ட தலை முடி தாடியுடன் கடைகளுக்கு சென்று கட்டிங் சேவிங் செய்து கொண்டனர். இதனால் சலூன் கடைகளில் கூட்டம் அதிகரித்தது.
New groom killed at Grandma's House. !! at Ranipet Arakkonam

New groom killed at Grandma's House. !! at Ranipet Arakkonam

May 24, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை :  அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் நள்ளிரவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் படாளம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன். இவர் படாளத்தில் கோழி பண்ணை நடத்தி வருகின்றார். இவரது மகன் பாரதி( வயது 24) என்பவர் வாலாஜாபாத் அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா ( வயது 19) என்ற பெண்ணை காதலித்து நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் பாரதி, சங்கீதா இருவரும் அரக்கோணம் அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு அதே பகுதியில் உள்ள அரிசி அரவை ஆலை அருகே நண்பர்களுடன் மது அருந்தியதாகவும் அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கை கலப்பாக மாறி அங்கிருந்தவர்கள் கத்தி மற்றும் கட்டை கொண்டு தாக்கியதில் குடிபோதையில் இருந்த பாரதி ரத்தகாயங்களுடன் சுருண்டு விழுந்தார். இதனை கண்ட நண்பர்கள் தலைமறைவாகினர். இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற ப
Ambulance Driver got infected by Corona today in Ranipet

Ambulance Driver got infected by Corona today in Ranipet

May 11, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா தொற்று   திமிரி அடுத்த பரதராமியை சேர்ந்தவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். மாவட்டத்தின் மொத்த எண்ணிக்கை 67 பேர். மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தகவல். #Ranipet #Corona #Vellore #COVID2019Ranipet
Ranipet records 10 New Cases total case Raises to 60

Ranipet records 10 New Cases total case Raises to 60

May 10, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 60-ஆக உயா்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50 பேரில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டுக்கு சென்று வந்த அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த 4 போ், நெமிலி பகுதியைச் சோ்ந்த 5 போ், வாலாஜாபேட்டையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஒருவா் உள்பட மொத்தம் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா்கள் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் இவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவா்களையும்
Corona confirms to Special Guard: 39 persons isolated

Corona confirms to Special Guard: 39 persons isolated

May 09, 2020 Raj Kumar.G
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து வந்த சிறப்புக் காவல் படை காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் பணியில் இருந்து 39 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தெற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50- ஆக உயா்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாவட்டக் காவல் துறையினருடன், கூடுதலாக 40 போ் கொண்ட சிறப்பு காவல் படையினா் கடந்த 4-ஆம் தேதி சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டனா். இவா்கள் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை சுற்று வட்டரங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், சிறப்புக் காவல் படை காவலா்களுக்கு சென்னையில் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யபட்டது. அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. அதில், சிறப்புக் காவல் படையில் பணியாற்றி வரும் 28 வயதுடைய திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. உடனடியாக அவா் திருவள்ளுா் மாவ
மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது

மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது

May 09, 2020 Raj Kumar.G
வாலாஜாபேட்டையில் மருத்துவர் , மருந்தாளுநர் , கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு சரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து வாலாஜாபேட்டை சுமைதாங்கி ஆகிய 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது .  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்புக்குள்ளான 43 பேரில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் , இந்நிலையில் வாலாஜாபேட்டை நகாப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 28 வயதுடைய மருத்துவர் , 3A சுப்யதுடைய மருந்தாளுநர் ஆகிய இருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து அவர்கள் இருவரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோக்கப்பட்டனர் , இதையடுத்து வாலாஜாபேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு , ' சீல் ' வைக்கப்பட்டது .  மேலும் , அத்தெரு அமைக்கப்பட்டுள்ளது . இதேபோல் சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த 3 கர்ப்பிணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து ஆரம்ப சுகா
Ranipet records one new COVID-19 Positive Case after 19 Days and another 27 persons under quarantine in Ambur

Ranipet records one new COVID-19 Positive Case after 19 Days and another 27 persons under quarantine in Ambur

May 01, 2020 Raj Kumar.G
RANIPET: Ranipet district, which has been remaining without new cases for 19 days, has reported one new COVID-19 positive case on Thursday.  "A 58 year old man, from Melvisharam, tested positive for corona virus on Thursday. He was shifted to Govt Vellore Medical College Hospital after receiving the results,” a senior officer of Health Department said. The man, working with a leather goods manufacturing firm in Maharashtra, returned to his native town on Monday travelling in a truck. However, he straightaway walked into the primary health centre (PHC) in Melvisharm, and was subsequently referred to Govt District Headquarters Hospital in Wallajapet and samples were taken.  The results were received on Thursday, and subsequently, he was moved to GVMCH from Govt District Headquarters Hospital. Contact tracing, quarantining of contacts and sanitizing the locality have been done by the concerned authorities of government departments an
Ranipet district collector launches automatic face mask vendor at ranipet collectorate

Ranipet district collector launches automatic face mask vendor at ranipet collectorate

April 28, 2020 Raj Kumar.G
Ranipet district collector S Divyadharshini launches automatic face mask vendor at ranipet collectorate ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 5 ரூபாய் விலையில் முக கவசம் வழங்கும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி முக கவசம் வழங்கும் எந்திரத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி,இ. ஆ. ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.