Subscribe to Newsletter


Walajapet
வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது .

வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது .

December 01, 2020 Raj Kumar.G
வாலாஜா நகராட்சியின் 154 வது ஆண்டு விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது .  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நக ராட்சி கடந்த 1866 ம் ஆண்டு தமிழகத்தில் முதலாவதாக தொடங்கப்பட்டதாகும் .கடந்த 1960 ம் ஆண்டு நூற் றாண்டுவிழா கொண்டா டப்பட்டது . தொடர்ந்து இந்த நகராட்சிக்கு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் உள்ளிட்ட தலை வர்கள் வருகை தந்து சிறப் பித்தனர் . தொடர்ந்து 154 வது ஆண்டு விழா நேற்று நக ராட்சிசார்பில் கொண்டா டப்பட்டது.  நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதிஷ்குமார் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப் புகளை வழங்கினார் . தொடர்ந்து அவர் பேசு கையில் , ' பொது மக்கள் அனை வரும் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி , கடைவரி ஆகியவற்றை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் . தொடர்ந்து பல்வேறு அடிப்படை கட்டமைப் புவசதிகள் செய்யப்பட்டு வருகிறது . ' இவ்வாறு அவர் பேசினார் . இந்நிகழ்ச்சியில் நக ராட்சி பொறியாளர் நட ராஜன் , பணிமேற்பார்வை யாளர் கமலக்கண்ணன் , துப்புரவு ஆய்வாளர் சந் தான கிருஷ்ணன் , களப் பணி உதவியாளர் மகேந் திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
Neither money nor money should be voted out - Collector Divyadarshini talks

Neither money nor money should be voted out - Collector Divyadarshini talks

January 26, 2020 Raj Kumar.G
வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழாவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு. நாம் இந்தியாவில் இருப்பது பெருமைக்குரியது. நம் நாட்டில் தான் வாக்குப்பதிவு எந்திரம் மூலமாக நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது பூர்த்தியாகும் அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு என்ற விதியை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கிறது. நான் எனக்கு 18 வயது பூர்த்தி அடைந்ததில் இருந்து ஒரு தேர்தலில் கூட விடுபடாமல் தொடர்ந்து அனைத்து தேர்தலிலும் வாக்களித்து வருகிறேன். நீங்களும் ஒரு தேர்தலில் கூட விடுபடாமல் அனைத்து தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு பொருளோ, பணமோ எதிர்பார்க்காமல் வாக்களி